×

703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15% டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவம் பெறுவது குறித்த முன்னோட்ட பயிற்சி முகாமை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15 சதவீதம் டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

10 இடங்களுக்கு ஒரு மண்டல குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு ஏற்றவாறு முகாம்களின் எண்ணிக்கை மாறுபடும். 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஒரு முகாம் என்ற அளவில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைக்கு ஏற்றவாறு முகாம்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

The post 703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15% டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Corporate Minister ,Radhakrishnan ,Chennai ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி ஆணையர் பெயரில்...